எனக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது – ஏபிடி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டி வில்லியர்ஸ். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் விளையாடி வந்தார்.
360 டிகிரி பேட்ஸ்மேன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ்க்கு பெங்களூருவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையேயான பலமான பிணைப்பும் உள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கும் தனக்கும் இடையிலான உறவு குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் சில சுவாரசியமான கருத்துக்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அப்போது, ஆர்சிபி ரசிகர்கள் சிலர் உங்களுக்கு பெங்களூருவில் அபார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்துள்ளனர். அவர்கள் இங்கே வந்து விடும்படி அழைப்பு விடுத்துள்ளனர். பெங்களூரு நகரத்துடனான உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஏபி டிவிலியர்ஸ், எனக்கு இப்போது 3 குழந்தைகள் உள்ளனர். அதனால் அந்த அபார்ட்மெண்டில் எனக்கு நிறைய அறைகள் இருக்க வேண்டும் என சுவாரசியமாக கூறினார்.
ஆர்சிபி அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது சாதாரண ஒன்று கிடையாது. எனக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது.
நான் மற்ற பிரான்சைஸிஸ் அணிகளில் விளையாடியபோது இதுபோன்று உணர்வு பூர்வமாக எந்த ஒரு நிகழ்வையும் உணர்ந்ததில்லை. பெங்களூர் அணிக்காக விளையாடும் போது மட்டும் என் மனது அவர்களுடன் ஒன்றிருந்தது. அதோடு ஆர்சிபி ரசிகர்களும் ஆர்சிபி அணியும் எனக்கு முக்கியமான ஒரு பந்தம் என தெரிவித்தார்.