X

எந்த சூழலிலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! – உதயநிதி ஸ்டாலின்

அரசியல் குடும்ப வாரிசான நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ என்ற படத்தில் நடித்த் வரும் உதயநிதி, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, திமுக நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கெடுத்து வரும் உதயநிதி, திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியல் தீவிரம் காட்டப் போவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்படி ஆனால், தேர்தலில் நிற்க போகீறிகளா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “என்னை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது, ஒரு நடிகராகவும் மற்றும் திமுக நாளிதழின் மேலாளர் என்ற முறையிலும் தான். மற்றபடி நான் தேர்தலில் போட்டியிட போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்திதான். எந்த சூழ்நிலையிலும் எம்.எல்.ஏ சீட்டோ அல்லது வேறு எந்த பதவிக்காகவோ நான் தேர்தலில் நிற்க மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.