எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக் ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
இந்நிலையில் மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. 8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.