எதிர்ப்பார்ப்புகள் வலியை ஏற்படுத்துகிறது – இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திவாட்டியா
வரும் ஜூன் 26-ஆம் தேதி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இந்த தொடரில் ராகுல் திரப்பாட்டிக்கு முதல் முறையாக வாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் சிறப்பான பங்களிப்பை செய்த ஆல் ரவுண்டராக வலம் வந்த ராகுல் திவாட்டியாவிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவர், தற்போது இடம் கிடைக்காத ஏமாற்றத்தை ராகுல் திவாட்டியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “எதிர்பார்ப்புகள் வலியை ஏற்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.