எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுமா? – பா.ஜ.க அரசை விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்

பாராளுமன்ற மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் என்றும் தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், இன்று மக்களவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை. அவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது “ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்” என்றார்.

மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படக்காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools