X

எண்ணத்தில் மட்டும் தான் வலிமை இருக்கிறது – நடிகை சமந்தா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை சமந்தா உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இவர் நடிக்கும் வெப் தொடரில் சண்டை காட்சிகள் உள்ளன என்றும், அதில் நடிக்கவே கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.