சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.