X

எடப்பாடி பழனிசாமி ஆதரவு போஸ்டர்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என உத்தரவிட்டார். இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட இரு நபர் அமர்வில் நள்ளிரவில் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் வீட்டின் அருகே ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் போஸ்டர்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஈபிஎஸ் ஆதரவு போஸ்டர்களை எரித்ததால் பரபாப்பு ஏற்பட்டது.