X

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க பார்க்கிறார் – வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேச்சு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர். அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பின்னர் பேசியதாவது:-

சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.