X

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரம் தலையெடுக்கும் – கமல்ஹாசன் தாக்கு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது முதல்கட்ட பிரசாரத்தை தென்மாவட்டங்களில் மேற்கொண்டார். சீரமைப்போம் தமிழகத்தை, என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட இந்த பிரசாரத்தில் ஆளுங்கட்சியின் பணிகளை விமர்சனம் செய்ததுடன், மத்திய அரசையும் விமர்சித்தார்.

இந்நிலையில், கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ‘ஒரே பிரதமர்’

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
சம நீதியும், சமூக நீதியும் இல்லாத ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி!

#சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல

இவ்வாறு கமல் கூறி உள்ளார்.