X

எங்கள் அணி சிறந்த பேலன் கொண்ட அணியாக உள்ளது – டெல்லி அணி குறித்து ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி பேட்டிங் செய்து வருபவர் ஷிகர் தவான். டெல்லியைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். டெல்லி அணியில் இவருடன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்நிலையில் முன்னணி இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘மிகவும் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும். இந்த வருடம் எங்கள் அணி மிகவும் சிறந்த பேலன்ஸ் அணியாக உள்ளது. நாங்கள் சிறந்த ஆல்-ரவுண்டர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளோம்.

ஐந்து இந்திய பேட்ஸ்மேன்களை பெற்றுள்ள எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான குறிக்கோள். ஆகவே, இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

ஷிகர் தவான் 2008-ம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2013-ல் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ், அதன்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார்.

Tags: sports news