பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம்ர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன.
பல பயங்கரவாத தாக்குதல்களில் ஓட்டு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசைதிருப்பியது. ஆனால் பா.ஜனதா அரசு உரி தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, ஓட்டு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்துள்ளது என தெரிவித்தார்.