Tamilசெய்திகள்

எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்த புதிய கட்டணம் முறை அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தில் இருந்து வரும் பாட்/ஸ்பேம் (Bot/Spam) பிரச்சினையை எதிர்கொள்ள புதிதாக சந்தா முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சந்தா முறை நாட்-எ-பாட் (Not-A-Bot) என்று அழைக்கப்படுகிறது. புதிய சந்தா திட்டத்தின் கீழ் பயனர்கள் வருடத்திற்கு ஒரு முறை 1 டாலர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

புதிய சந்தா முறை விரைவில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் துவங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த சந்தா முறை கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய சந்தா திட்டம், ஏற்கனவே உள்ள எக்ஸ் பயனர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

அதன்படி புதிதாக எக்ஸ் அக்கவுண்ட் செட்டப் செய்வதற்கு மொபைல் போன் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதைத் தொடர்ந்து சந்தா திட்டத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். வெப் வெர்ஷனில் பயனர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும், பதில் அளிப்பது, புக்மார்க் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.