Tamilசெய்திகள்

ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படவில்லை.

ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தமிழகத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ந்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால், இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கை நீட்டிப்பது கறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தற்போது ஒமிக்கிரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று பயமுறுத்தி வருவதால்,  ஊரடங்கை நீட்டிப்பதுடன் கொரோனா வழிகாட்டு முறைகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.