Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் – 2ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அதே போல் உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் ரத்தான இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.

2-ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி சுமார் 61000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி(வியாழக்கிழமை) 310 மையங்களில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *