உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. குழந்தை சுஜித் விழுந்த இடம் பொது இடம் அல்ல, அவர்களது சொந்த இடம்.

குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும். இதை மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்க பார்க்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த தேர்தலை நடத்த விரும்பவில்லை என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுவது தவறானது.

அ.தி.மு.க.வினர் அனைவருமே தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றியை பெறும்.

‘பிகில்’ திரைப்பட சிறப்பு காட்சியின்போது ரசிகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools