Tamilசெய்திகள்

உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை – ஜெயக்குமார் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

* உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

* அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே சோதனை நடத்தப்படுகிறது.

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப திமுக அரசு சோதனை நடத்துகிறது.

* லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.