முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.