உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நார்வேயில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல், 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற அன்ஷூ மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற சரிதா மோர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.