உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – சாய்னா நோவல் தோல்வி

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 23-ம் தேதி நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார். இந்த போட்டியில் புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools