உலக பணக்காரர்கள் பட்டியல் – டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த கவுதம் அதானி
உலக அளவில் பணக்காரர்களாக உள்ள நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான பட்டியலில் இந்தியாவின் அதானி குழும தலைவர் கவுதம் அதானி உலகின் 5-வது பணக்கார நபராகி உள்ளார்.
91 வயது வாரன் பப்பெட் 12 ஆயிரத்து 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதானியின் சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 370 கோடி அமெரிக்க டாலராக
உள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பணக்காரராக அதானி உள்ளார். இந்தியாவின் 2-வது மிக பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை (10,470 கோடி அமெரிக்க டாலர்) விட 1,900 கோடி அமெரிக்க டாலர்
சொத்து அதானியிடம் அதிகமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (17,200 கோடி அமெரிக்க டாலர்), 3வது இடத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆடம்பர பொருட்கள் விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட்
(16,790 கோடி அமெரிக்க டாலர்), 4வது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (13,200 கோடி அமெரிக்க டாலர்) இடம் பிடித்துள்ளனர்.