X

உலக பணக்காரர்கள் பட்டியல் – பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூகர்பெர்க் பின்னடைவு

அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி, முகேஷ் அம்பானியை விட பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கீழே சென்றுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

10வது இடத்தில் உள்ள கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலர். 11வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர்.

இவர்களுக்கு அடுத்த இடமான 12-வது இடம்பிடித்துள்ள மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலராக உள்ளது.
அதன் விவரம் வருமாறு:

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.

பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதார்கள் செலவினை குறைத்துள்ளதால், பேஸ்புக் வருவாய் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் முதலீடு செய்துள்ள பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் நியூயார்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவன பங்கு பெரும் சரிவைக் கண்டது. இதனால் மெட்டா பங்கின் விலை 26.39 சதவீதம் குறைந்துள்ளது.

ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தில் 12.8 சதவீத பங்கினை வைத்துள்ள மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர மதிப்பு 85 பில்லியன் டாலராக குறைந்ததாக தெரிவித்துள்ளது.