உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools