உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 7-ந்தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.