இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.
இந்தப் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்நிலையில், போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் 70 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. 53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும், 52.08 சதவீத புள்ளிகளுடன் இந்திய அனி 4-வது இடத்திலும், 51.85 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள்.