X

உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – இந்திய அணி 4வது இடத்திற்கு முன்னேறியது

இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

அதன்படி 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி  3-வது  இடத்திலும் உள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து  அணி 6-வது  இடத்தில் உள்ளது.