Tamilவிளையாட்டு

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி – சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி வெள்ளிப்பதக்கம் வென்றார்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியின் 21-14, 22-20 என்ற கணக்கில் சங்கர் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் அவரது கனவு தகர்ந்தது. இந்த தொடரில் வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்தியா சார்பில் அபர்ணா போபட் (1996), சாய்னா நேவால் (2006) மற்றும் சிரில் வர்மா (2015) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். எனினும் சாய்னா மட்டுமே கடந்த 2008 ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.