Tamilசினிமா

உலக சுற்றுலா மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்! – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

இதைத்தொடர்ந்து, ‘துணிவு’ படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘துணிவு’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.