X

உலக சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 17 ரன்னில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே தொடரை கைப்பற்றிய காரணத்தால் டி20 உலகக்கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கில் சோதனை முயற்சியாக 3-வது போட்டியில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் பவுலர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்பளித்தார். அதில் ஹர்ஷல் படேல், பிஷ்னோய் தவிர எஞ்சிய பவுலர்கள் சொதப்பினாலும் கடைசியில் இந்தியா போராடி தான் தோல்வியடைந்தது.

முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பதிவு செய்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை ரோகித் சமன் செய்திருந்திருப்பார்.

அந்த சாதனையை ரோகித் தவறவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 1. ரிக்கி பாண்டிங் : 20 (2008) 2. ரோகித் சர்மா : 19 (2019/22) 3. ரிக்கி பாண்டிங் : 16 (2006/07)