X

உலக கோப்பை ஹாக்கி – பெல்ஜியத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி

15-வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்றது. தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் நேருக்குநேர் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் 2 கோல்களை அடித்தது. ஜெர்மனி ஒரு கோலை அடிக்க 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ஜெர்மனி மீண்டும் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற சம நிலை வகித்தன. இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.