உலக கோப்பை ஹாக்கி – தென் கொரியா, ஜெர்மனி காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று நடைபெற்ற கிராஸ்ஓவர் போட்டியில் தென் கொரிய அணி, 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் 3-2 என தென் கொரியா வெற்றி பெற்றது.
ஆசிய நாடுகளில் தென் கொரியா மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி, 5-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. ஜெர்மனி அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools