X

உலக கோப்பை கிரிக்கெட் – வீரர்கள் தேர்வில் தலையிட்ட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ராபின் ரவுண்டு முறையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 45 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை வருகிற 23-ந்தேதிக்குள் ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவது மாற்றம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட காரணத்துடன் மே 23-ந்தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகின்றன. நியூசிலாந்து அணி இன்று உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் சான்ட்னெர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். அவருடன் டாட் ஆஸ்ட்லேவை சேர்க்க நியூசிலாந்து தேர்வுக்குழு முடிவு செய்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இஷ் சோதியை அணியில் சேர்க்க வேண்டும். அவருக்கு அனுபவம் உள்ளது. நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடியுள்ளார். அதனால் இங்கிலாந்து சூழ்நிலையை புரிந்து கொண்டிருப்பார். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் வீரர்கள் தேர்வு தள்ளிப்போகியுள்ளதாக கூறப்படுகிறது. மாற்று விக்கெட் கீப்பராக டாம் பிளண்டல் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கொலின் முன்றோ 3-வது தொடக்க பேட்ஸ்மேனாக இடம்பெறலாம்.

Tags: sports news