Tamilவிளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதலில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தலா 46 மற்றும் 26 ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக, விராக் கோலி 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்தார்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும், கே.எல்.ராகுல் 27 ரன்களும், சூர்ய குமார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 39 ரன்களும், முகமது ஷமி ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில், 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.