X

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சட்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்.

Tags: tamil sports