உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை. உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports