உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – தகுதி சுற்று போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், தகுதி சுற்று போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools