12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன்
ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் ஆக்லாந்து நகரில் இன்று காலை தொடங்கி உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது.