X

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தும் – மைக்கேல் வாகன் கருத்து

இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வலிமையடைந்துள்ளது. தற்போது அந்த அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. சொந்த நாட்டில் தொடர் நடைபெறுவதால் முதன்முறையாக இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – இந்தியா பலப்பரீட்சை நடத்தும் என்று கணித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்ல இன்னும் 100 நாட்கள் இருக்கிறது. இந்தியாவை இறுதிப் போட்டியில் வெல்லும் என்பது என்னுடைய கணிப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.