Tamilவிளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டி – கோஸ்டா ரிகாவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் டேனி ஆல்மோ ஒரு கோலும், 21வது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ ஒரு கோலும், 31வது நிமிடத்தில் பெரா டாரஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 3-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 54 வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரா டாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் காவியும், 90வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 92வதுநிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்தனர். கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 7-0 என அபார வெற்றி பெற்றது.