உலக கோப்பை கால்பந்து – பிரான்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியோடு வெளியேறியது துனிசியா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று குரூப்-டி பிரிவில் உள்ள துனிசியா-பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. அத்துடன், பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது. 3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools