Tamilவிளையாட்டு

உலக கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க மாட்டார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டிணத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந் தேதி நடைபெறும்.

ஒரு நாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்து அறிவித்தது.

கே.எல். ராகுல் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த அவர் உள்ளூர் போட்டியில் அபாரமாக ஆடியதால் வாய்ப்பை பெற்றார்.

இதேபோல கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோரும் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் ஒருநாள் போட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அணியின் 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் ரிசப்பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தினேஷ்கார்த்திக் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அணி நிர்வாகம் தன்னை முழுவதும் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி போட்டி ஆஸ்திரேலியா தொடர் ஆகும். இதில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இருப்பது உலக கோப்பையில் அவரது இடம் குறித்த ஐயங்களை எழுப்பி உள்ளது. உலக கோப்பை அணியிலும் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

கடந்த 2 ஆண்டுகளில் இலக்கை வெற்றிகரமாக முடித்த 10 போட்டியில் தினேஷ் கார்த்திக் 7 முறை அவுட் ஆகாமல் இருந்தார். ஜோரூட் 9 முறையும், விராட்கோலி, டோனி தலா 8 முறையும், வெற்றி இலக்கை எடுத்த போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்குடன் ஒப்பிடுகையில் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் எந்த வரிசை நிலையிலும் ஆடக் கூடியவர். அப்படி உள்ள தினே‌ஷ கார்த்திக்கை கழற்றி விட்டது அதிர்ச்சியானதே.

தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்க முடியும் என்றால் அதன் பின்னணியையும் அணி தேர்வு குழுவுடன் செயல்பாடுகளும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில் ரிசப்பந்த், ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்.

உலக கோப்பை போட்டிக்கான 15 வீரர்களில் 13 பேரை தேர்வு குழு அடையாளம் கண்டுள்ளது அவர்கள் விவரம்:

விராட்கோலி, தவான், ரோகித்சர்மா, அம்பதிராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ‌ஷமி.

மீதியுள்ள 2 இடத்துக்கு 4 வீரர்கள் உள்ளனர். 1-வது விக்கெட் கீப்பரில் ரிசப் பண்ந்துக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது. மற்றொரு வீரர் வேகப்பந்து வீச்சாளரா? 3-வது தொடக்க வீரரா, என்பதை முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *