உலக கோப்பையை வெல்வது தான் இந்த ஆண்டு நான் எடுத்திருக்கும் தீர்மானம் – ஹர்திக் பாண்ட்யா கருத்து

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக கோப்பையை வெல்வதுதான் இந்த புத்தாண்டில் நான் எடுத்திருக்கும் தீர்மானம். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது.

அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் வருகிறது. அவற்றை வெல்லவேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு உள்ள இலக்கு. இந்தியாவை அவ்வளவு எளிதாக இலங்கை வீழ்த்திவிட முடியாது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools