X

உலக கோப்பையில் வித்தியாசமான முறையில் விளையாடுவோம் – ரோகித் சர்மா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் வரவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக விளையாட முயற்சி செய்வோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடனும் அணுகுமுறையுடன் களமிறங்குவோம். நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம்.

வீரர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாட வேண்டாம். வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என முயற்சிப்போம். இந்த போட்டி முக்கியம். இந்த தொடர் முக்கியம் என நினைத்து விளையாடுகிறோம்.

ஆனால் எதுவும் சரியாக நடக்கவில்லை. எனவே இந்த உலக கோப்பை தொடரில் நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுடுவோம். எங்களின் முழு கவனமும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிப்பதில் இருக்கும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Tags: tamil sports