Tamilவிளையாட்டு

உலக கோப்பைக்கான கிரிக்கெட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

ஆரோன் பின்ஞ் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரெண்டாப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா.

உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *