உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பல் பயணத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார்.

இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.

இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools