உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியல் – 10 வது இடம் பிடித்த சென்னை

லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்னை 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news