துபாயில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் மூலம் இந்தியா திரில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்ததுடன் பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில்,பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நிலையான ஆட்டம் மூலம் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்று தான் நம்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
அவர் இப்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்பது அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அதன்படி செயல்படுகிறார். அதற்கேற்ப அவனது மனநிலையும் அமைகிறது. அவர் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார். அவர் பேட்டிங் செய்யும் விதம் ஆண்ட்ரே ரஸ்ஸலை விடவும், எங்களிடம் உள்ள அனைத்து ஆல்ரவுண்டர்களை விடவும் சிறப்பாக இருக்கிறது.
மேலும் அவர் அனைத்து நிலைகளிலும் இந்திய அணியில் மிக முக்கியமான உறுப்பினராக இருக்கிறார் என்றும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.