உலகளவில் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது. கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools