உலகளவில் ஏற்றுமதியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது – பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவானது. 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதற்கான ஜி20 நாடுகளின் தலைமைத்துவம் தனித்துவமான ஒரு வாய்ப்பு.

102 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளவில் ஏற்றுமதியில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools