உலகம் சுற்ற தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படதின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூலை முதல் வாரத்தில் தஞ்சாவூரில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் புரோமோசனுக்காக உலகின் பல பகுதிகளுக்கு படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.